பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், இந்த பழமொழி பாம்பினை பார்த்து அஞ்சுபவர்களுக்கு மட்டுமே.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பாம்பினை பார்த்தால் அதனை எப்படியாவது சூப் வைத்து சாப்பிடலாம் என்பதிலேயே அவர்கள் கவனம் இருக்கும்.
பாம்பின் விஷத்தை வைத்து மருந்து தயாரிக்க வேண்டும் என வெளிநாட்டு மருத்துவர்கள், அதனை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
பாம்புகளை சிவனுடைய ஆபரணம் என்பார்கள், விஷ்ணுவின் படுக்கை என்பார்கள், இவ்வளவு சிறப்புமிகுந்த பாம்புகள், அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, ஆபத்து ஏற்படுத்திய மனிதர்களை கொத்தும், பாம்புகள் தன்னை தாக்கியவரை விரட்டி விரட்டி பழிவாங்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.
பாம்பு பற்றி சில உண்மைகள்
மனிதர்களைப் போன்று பாம்பு மூக்கினால் சுவாசிப்பதில்லை, நாக்குகளால் சுவாசிக்கிறது, அடிக்கடி நாக்கை வெளியே நீட்டி சுவாசிக்கும்.
மோப்பமும் பிடிக்கும், அதற்கு காதுகள் கிடையாது, தன்னை சுற்றியிருக்கும் அதிர்வுகளை மட்டுமே உணரும்.
அதன் கண்களுக்கு இமைகள் கிடையாது, எப்போதும் விழித்துப் பார்த்தபடி இருக்கும், தலையின் பக்கவாட்டில் இரண்டு பக்கத்திலும் கண்கள் இருக்கும்.
அதனால் 180 டிகிரி வரைக்கும் சுழற்றி பார்க்கும் சக்தி கொண்டது, இதன் செதில்கள் எப்படிப்பட்ட இடத்திலும் உறுதியாக பற்றிச் செல்ல வசதியாக இருக்கிறது, வேகமாக மரம் ஏறவும் இந்த செதில்கள் உதவுகிறது.
இச்சாதாரி பாம்புகள்
பாம்புகளில் பல்வேறு வகைகள் உள்ளன, இதில் ஒன்றுதான் இச்சாதாரி பாம்புகள்.
‘இச்சாதாரி’ என்கிற ஒருவகை பாம்பு 100 ஆண்டுகள் வாழ்ந்து, பலவித அற்புத சக்திகளை பெற்றுவிடும், பிறகு அது மனித உருவெடுத்து மனிதர்கள் மத்தியில் வாழும்.
இந்த நாகம் தன்னை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக மனித உருவெடுத்து வரும்.
நல்ல மனிதர்களுக்கு இந்த ‘இச்சாதாரி’ பாம்புகள் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் என்றும், கெட்டவர்களை பழிவாங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இவை அனைத்தும் கட்டுக்கதையே, பாம்பின் சராசரி ஆயுட்காலமே 30 ஆண்டுகள்தான்.
அதையும் தாண்டி எந்த பாம்பும் 100 ஆண்டு வாழாது, மனித உருவும் எடுக்காது.