நமது தோலில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள் தொடர்பான பிரச்சனைகள் பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக் கூடியது.
அந்த வகையில் உருவாகும் கொழுப்புக் கட்டிகளானது, நமது தோலில் உருவாவதற்கு கிருமித் தொற்றுகளும் காரணமாக உள்ளது. மேலும் இதனை குணப்படுத்த தேன் மற்றும் மாவுக் கலவை நல்ல நிவாரணியாக இருக்கும்.
கொழுப்புக் கட்டிகள் ஏற்பட என்ன காரணம்?
கொழுப்புக் கட்டிகள் என்பது நமது தோலின் உட்பகுதியில் உள்ள சிறுசிறு கொழுப்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் தங்குவதால் ஏற்படுகிறது.
கொழுப்புக் கட்டியானது அடிபோஸ் வகை கொழுப்புகளினால் ஆனது. இதற்கு மற்றொரு பெயர் கழலை என்றும் கூறுவார்கள்.
கொழுப்புக்கட்டி பிரச்சனையானது நூற்றில் உள்ள ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இந்தக் கட்டியானது நமது உடம்பில் அங்கும், இங்கும் 3செ.மீ முதல் 20செ.மீ வரை வளரக் கூடியதாக உள்ளது.
நமது குடும்பத்தின் உள்ள யாருக்காவது கொழுப்புக் கட்டிகள் இருந்தால், அது அந்தக் குடும்பத்தின் பரம்பரை சேர்ந்தவர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோய்களாக இருக்கிறது.
கொழுப்புக் கட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளது. வலி உள்ள கொழுப்புக் கட்டிகள் மற்றும் வலி இல்லாத கட்டிகள். மேலும் கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
கொழுப்புக் கட்டிகளை கரைக்க உதவும் இயற்கை முறை
தேவையான பொருட்கள்
- மைதா- தேவையான அளவு
- தேன்- 1 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் தேன் மற்றும் மைதா மாவை சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டேஜ்ஜை மேலே ஒட்டிக் கொண்டு, 36 மணிநேரம் கழித்து கழுவி, மீண்டும் புதிய கலவையைத் தடவ வேண்டும்.
- இவ்வாறு தொடர்ந்து 8 நாட்களுக்கு செய்து வந்தால், உடலில் தோன்றி உள்ள கொழுப்புத் திசுக்கட்டிகள் கரைந்திருப்பதைக் காணலாம்.
குறிப்பு
- உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.