வெந்தய கீரை- 2 கப்,
தோசை மாவு- தேவையான அளவு,
தேங்காய் துருவல்- சிறிதளவு,
நெய்- சிறிதளவு.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்க வேண்டும். பின்னர் சூடான நெய்யில் வெந்தய கீரையை போட்டு வதக்க வேண்டும். பின் வதக்கிய வெந்தய கீரை மற்றும் துருவிய தேங்காயை தோசை மாவில் சேர்த்து, அவற்றில் கலந்து கொள்ளவும்.
இவ்வாறு கலந்த மாவை அடுப்பில் வைத்து தோசையாக ஊற்றி வார்த்து எடுக்க வேண்டும். பின்னர் தயார் செய்த கீரை தோசையை சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.