என்னை பார்த்து சிலர் பொறாமை படுறாங்க- சிவகார்த்திகேயன்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து நேற்று பேட்டியளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது:

“சீமராஜா ராஜாவின் கதை. இதில் காமெடி , குடும்ப உறவுகள், காதல் கதையம்சத்துடன்  தயாராகி உள்ளது. இந்த படத்தில் நான் ராஜாவாகவும், இந்த காலத்து இளைஞனாகவும் நடிச்சு இருக்கேன். தமிழ் மண் மீதான ஈர்ப்பை படம் பிரதிபலிக்கும். சண்டை காட்சிகளை ரத்தம், குரூரம் இல்லாமல படமாக்கியிருக்கோம்.

ரஜினிகாந்தின் எந்த மாதிரி படங்களை திரையில் பார்த்து ரசித்தோமோ, அதுமாதிரி கதைகளில் நான் இப்ப நடிக்கிறது சந்தோஷம்தான். ஆறு மாதத்துக்கு ஒரு படம் நடிக்கணும்ணு ஆசைப்படுறேன்.
நான் இப்ப இருக்கிற இடத்தை பார்த்து சிலர் பொறாமைபடுறதா  பேசிக்கிறாங்க.

இப்படி ஒரு இடத்துக்கு வருவேன்ணு நானே எதிர்பார்க்கலைங்க.  சினிமாவுக்குள் இருக்கத்தான் ஆசைப்பட்டேன். இங்கு யாரும் ஒரு இடத்தை அவர்களாக எடுத்துக்க முடியாது. அந்த இடம் கொடுக்கப்படுவதுதான். அதுக்காக  பொறாமைப்பட தேவை இல்லை.

மெஜாரிட்டி மக்கள் என்னை அவங்க வீட்டு பையன் மாதிரி நினைக்கிறாங்க. ஒரு குட்டிப்பையன் என்கிட்ட வந்து உங்கள் படம் எல்லாம் நன்றாக ஓட வேண்டும் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னான். இதைவிட பெரிய கொடுப்பினை என்ன இருக்கிறது. நெகட்டிவ்வான விஷயங்களும், பொறாமைப்படுறதும் கொஞ்சம் சதவீதம் தான். அதைப்பத்தி கவலைப்பட தேவை இல்லை.”  என்றார் சிவகார்த்திகேயன்