நான் கப்டன் பதவியிலிருந்து விலகியமைக்கு காரணம் இது தான்…..

இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கப்டன் பதவியிலிருந்து திடீரென்று விலகினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

இந்திய அணிக்கு ஐ.சி.சி.யால் நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் டோனி. இப்படி இந்திய அணியை கம்பீரமாக வழிநடத்தி வந்த டோனி, திடீரென்று கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் திகதி தன்னுடைய கப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

டோனி இதற்காத்தான் ராஜினாமா செய்தார் என்று பல செய்திகள் வந்தாலும், டோனி அது குறித்து இரண்டு ஆண்டுகளாக வாயை திறக்காமல் இருந்தார்.

இப்படி 2 ஆண்டுகளாக மெளனம் காத்து வந்த டோனி, தற்போது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு டோனி, 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலிமையான அணியை உருவாக்க முடிவு செய்தோம்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டும், புதிதாக கேப்டன் பொறுப்பேற்பவருக்கு அவகாசம் கொடுப்பதற்காகவும் தான் 2016-ம் ஆண்டிலே எனது கப்டன் பதவியை ராஜினாமா செய்தேன் இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.