இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் தூக்கத்திற்கும் இடையில் தொடர்பா?

உண்மையில் மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமென்பது தொடர்பான ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனாலும் தற்போது 1 மில்லியன் இளம் வயதினரில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் 40 வீதமானோர் இரவில் 7 மணித்தியாலங்களுக்கு குறைவாகவே நித்திரை கொள்கின்றனர்.

ஆனால் இவ் ஆய்வு அதிகளவு நித்திரையும், குறைந்தளவு நித்திரையும் ஆரோக்கியமானதல்ல என்கிறது.

அதாவது 6 மணித்தியாலங்களுக்கு குறைவான நித்திரையும், 8 மணித்தியாலங்களுக்கு அதிகமான நித்திரையும் மனிதரில் ரத்தக் குழாய் நோய்கள் மற்றும் அடிப்புக்களைத் தோற்றவிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

காரணம், நித்திரையானது நமது உடலில் நடைபெறும் உயிரியல் செயற்பாடுகள், குருதியமுக்கம் மற்றும் வீக்க செயற்பாடுகள் போன்றவற்றைப் பாதிப்பதாக சொல்லப்படுகிறது.