முதல் திருமணநாள் முடிந்த அடுத்த நாளே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னை திருமுல்லைவாயிலில் நடைபெற்றுள்ளது.
ஆனந்தி வயது 39 இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவானந்தன் என்பவருக்கும் ஓராண்டிற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் ஆன முதல் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நாள்.
அன்று ஆனந்தி கணவரை கோவிலுக்கு அழைத்து செல்ல சொன்னதாகவும் ஆனால் கணவர் தனது தந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. மேலும் திருமண நாள் அன்று ஆனந்தியிடம் கணவர் பேசவில்லை எனக் கூறப்படுகின்றது.
மனம் உடைந்த நிலையில் இருந்த ஆனந்தி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்யும் முன் அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். ஏழைக்கு மனைவியாக இருந்து விடலாம் ஆனால் கோழைக்கு மனைவியாக இருக்க முடியாது என தற்கொலை செய்யும் முன் ஆனந்தி எழுதி வைத்துள்ளார்.
ஆனந்தி எழுதி வைத்துள்ள கடிதத்தில்
அக்கா,மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா,மாமா நான் தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்தது என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி கொடுங்க, அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது.
அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கோங்க, இரண்டு வீடியோவும் இருக்கு. என் மாமியார் கொடூர குணம் கொண்டவர், என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை.
ஏழைக்கு மனைவியா இருக்கலாம். ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல் டாட்டா பாய் மை சுவிட் பேமலி
எனக் குறிப்பிட்டுள்ளார்.