வடக்குக் கிழக்கில் நுண்கடன் எனும் பிரச்சினையானது தமிழ்ப் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அளவுக்குத் தலைதூக்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ்ப் பெண்களை மன ரீதியாகச் சித்திரவதை செய்யுமளவுக்கும் குடும்பங்களுக்குள் குழப்பங்கள் ஏற்படுத்துமளவுக்கும் இந்த விவகாரம் தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பீ.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நுண்கடன் பிரச்சினையானது தமிழ்ப் பெண்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் அவர்களது பொருளாதாரம் படுமோசமான நிலையில் வீழ்த்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் நுண்கடன் தமிழ்ப் பெண்களைச் சித்திரவதைக்குள்ளாக்கும் மாபெரும் அரக்கன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.