கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்தாண்டு இருந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கணைய புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு மூன்று மாதம் வரையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.
பிறகு, அவ்வபோது அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிக்சை பெற்று வந்த காலத்திலும், அரசியல் பொறுப்புகளை கவனித்தும் வந்தார். மேலும், அவரை பிரதமர் மோடி உட்பட பலரும் உடல்நலம் விசாரித்துச் சென்றனர்.
இந்நிலையில், மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கோவா மாநில துணை சபாநாயகர் கூறுகையில், இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான், அவர் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.