முல்லைத்தீவு – நாயாறு பகுதி இந்து ஆலயம் நிர்வாகம், இராணுவத்தினரின் அவசர உதவி ஒன்றை இன்று கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆலயத்திற்குள் இருந்த 1000 கிலோ டைனமோ மின் இயந்திரம் ஒன்றை இடமாற்றம் செய்து தருமாறு உதவி கோரப்பட்டது.
நாயாற்று பகுதி பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்த நிலையில், இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் மின் சேவைக்கு மேலதிகமாக ஆலய வெளிவீதிக்கு மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.
இதனால் ஆலயத்திற்குள் இருந்த 1000 கிலோ டைனமோ மின் இயந்திரத்தை வெளிவீதிக்கு கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது.இந்த நிலையில், குறித்த மின் இயத்திரத்தை இடமாற்றம் செய்ய அந்தப்பகுதி இளைஞர்களின் உதவி எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இரண்டு நாட்களாக இளைஞர்களின் உதவி கிடைக்காத நிலையில், ஆலய நிர்வாகம் அருகில் இருந்த இராணுவ முகாம் சென்று உதவி கோரியுள்ளனர்.இந்த நிலையில் இராணுவ முகாமில் இருந்து இன்று சென்ற 7 இராணுவ வீரர்கள் மின் இயந்திரத்தை வெளியேற்றிக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.