என் மனைவியை அவர் திருமணம் பண்ணிகிட்டாரு: ஊருக்கு திரும்பிய கணவன் கண்ணீர்!

கேரளாவில் தனது மனைவியை கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

கோழிக்கோட்டை சேர்ந்த நபர் ஒருவர் பெகரினில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர் பொலிசில் ஒரு புகார் அளித்தார்.

அதில், கிர்மணி மனோஜ் என்பவர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.

இந்நிலையில் பரோலில் வெளியில் வந்த அவர் என் மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகார் அளித்தார்.

மேலும், தனது மனைவி தன்னை சட்டரீதியாக பிரியவில்லை எனவும், அவரிடம் உள்ள தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.