பெயின் கில்லருக்கு அடிமையாகும் அமெரிக்க மக்கள்: ஆயுட்காலம் குறையும் அபாயம்

அமெரிக்காவில் உள்ள மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைந்துகொண்டே செல்கின்றது.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவிளைவுகளைக் கொண்ட பெயின்கில்லருக்கான எல்லையற்ற அடிமைத்தனம்.

தற்போது மக்களுக்கு அறுதல் அளிக்கும் விதமாக மருத்துவர்களால் ஒரு புதிய வகை பெயின்கில்லர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

AT–121 எனப்படும் இப் பெயின்கில்லரானது மார்பின் எனப்படும் பெயின் கில்லரிலும் அதிக சக்திவாய்ந்தது என சொல்லப்படுகிறது.

மேலும் இது தீங்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக இது மார்பினைப் போன்று போதையினை தோற்றுவிப்பதில்லை.