தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் கடந்த 1963-ம் ஆண்டிற்கு முன்னர் சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.
1963-ம் ஆண்டு கிராமத்திற்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்ற சாமியார், மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறியுள்ளார். அதிலிருந்து அந்த கிராம மக்கள் சைவத்திற்கு மாறியுள்ளனர்
அசைவம் சாப்பிடாத இந்த கிராமத்தினர் டாஸ்மாக் பக்கமும் செல்வதில்லை.
ஆண்களை திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் அசைவமாக இருந்தால், சைவத்திற்கு மாறி விடுகின்றனர்.
வாடிமனைப்பட்டி கிராமத்தில் பலர் 80 வயது முதல் 105 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் கூறியுள்ளார்.