மோமோ விளையாட்டின் விபரீதம்…..பிளஸ் டூ மாணவன் தற்கொலை…..!
கொஞ்ச காலத்திற்கு முன்பாக, புளு வேல்ஸ், என்ற விளையாட்டினால், பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். விபரீதமான அந்த ஆன்ட்ராய்டு போன் கேம், தற்போது மோமோ என்ற புதிய ரூபம் எடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பிளஸ்புரத்தைச் சேர்ந்த மிசா பாட்சா – நுார்ஜஹான் தம்பதியின் வளர்ப்பு மகன் அப்பாஸ் முகமது (வயது 17). வத்தலக்குண்டு, அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், பிளஸ் டூ படித்து வந்தார்.
கடந்த 3 மாதங்களாக, செல்போனில் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவன் யாருடன் பேசாமல், இருந்தான். அத்தியாவசியத்தைத் தவிர, வேறு எதற்காகவும், பேசுவது கிடையாது.
வெளியே சென்றிருந்த அப்பாஸ், வெகு நேரம் கழித்து இரவு வீடு திரும்பியிருக்கிறான். தன் தாயிடம், டீ வேண்டும், என்று கேட்டிருக்கிறான். அவனது தாய் டீ போட்டு எடுத்துக் கொண்டு, மாடியில் உள்ள அவன் அறைக்குச் சென்ற போது, கதவு தாழ்ப்பாள் போட்டிருந்தது.
அவனைக் கூப்பிட்டும், பதில் அளிக்காததால், கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அப்பாஸ் துாக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.
இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, மிசா பாட்சா, தன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவன் போனை ஆய்வு செய்த போது, அது லாக் செய்யப் பட்டிருந்தது.
விபரீதமான செல்போன் விளையாட்டு, ஒரு அப்பாவிச் சிறுவனைப் பலி வாங்கியிருக்கிறது!