அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை மொத்தமாக தாக்கியுள்ள அதிபயங்கரமான புளோரன்ஸ் புயல் தொடர்பில் தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வானிலை அறிக்கை செய்தி ஊடகமானது விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் இந்த புயலை ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புயலின் தாக்கத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதுவரை அந்த வீடியோவானது 3 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது. புயல் அடிக்கும் நிலையில் தண்ணீர் மட்டம் படிப்படியாக உயர்வதும், புயலின் உக்கிரம் எவ்வாறு இருக்கும் எனவும் வாகனங்கள் தண்ணீரில் மிதப்பது போன்றும் அமைந்துள்ளது.
தண்ணீர் மட்டம் 9 அடியை தாண்டினால் அது உயிருக்கு ஆபத்தான கட்டம் என குறிப்பிடும் அந்த வீடியோ காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் சிலர் இந்த வீடியோவை கடுமையாக விமர்சித்துள்ளனர். மக்களை பயம் முறுத்தும் இதுபோன்ற காட்சிகளை ஊக்கப்படுத்த வேண்டாம் எனவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.