இந்த பழத்தின் தோலை தூக்கி வீசி மாட்டீர்கள்! பெண்களே கட்டாயம் படிக்கவும்

பழங்களில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அது நமக்குப் புத்துணர்ச்சியையும் உடலுக்குத் தேவையான ஆற்றலும் உடலின் செயலியக்கம் சரியாக இயங்கவும் உதவி செய்கிறது.

இது வெறுமனே உடல் உறுப்புகளுக்கு மட்டுமே ஆரோக்கியம் என்பது கிடையாது. அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் கூட நன்மை தரக்கூடியது.

தினமும் நம்முடைய உணவில் பழங்கள் சேர்த்துக் கொள்வதினால் எவ்வளவு நன்மைகள் நமக்கு உருவாகின்றதோ அதே அளவுக்கு மட்டுமல்ல, அதைவிட அதிகமான சத்துக்கள் பழங்களின் தோல்களில் உண்டு.

அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் நிறைந்த நன்மைகளைத் தரும். குறிப்பாக சில பழங்களுடைய தோல்களை சாப்பிட்டுவிட்டு, தூக்கிப் போட வேண்டாம். அது நம்முடைய சருமத்தை தூய்மைப்படுத்தும். அதேபோல், சருமத்தையும் முடியையும் மாய்ச்சரைஸராகவும் இருக்கும்.

தர்பூசணி தோல்

தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி உங்களுடைய சருமத் துளைகளுக்குள் சென்று, உள்ளுக்குள் இருக்கின்ற அழுக்குகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் உள்புறம் வரைக்கும் ஊருவிச் சென்று சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.