கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களான வாட்சப் பேஸ்புக் மட்டுமல்லாது தொலைக்காட்சி ஊடகங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வந்தது ஒரு சிறுமியின் அழுகையுடன் கூடிய மழலை மொழி பேசும் வீடியோ . குழந்தையின் தாய் அடிக்கும்போது அடிக்காதீங்க குணமா சொல்லுங்க கேட்பாங்க என்ற சிறுமியின் வீடியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் பரவலானது . அதனை நிகழ்த்திய சிறுமியின் வயது வெறும் நான்கரைதான் திருப்பூரில் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறார் . அவரின் வசனங்கள் மட்டுமல்லாது சுட்டித்தனமும் வைரலானது குறித்து குழந்தை மட்டுமல்லாது அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் பிரவீனா கூறுகையில் , ஸ்மித்தா சிறு வயது முதலே துடிதுடிப்புடனே இருந்து வருவதாகவும் , சில நேரங்களில் எங்களுக்கே அறுவுரை சொல்வது போல நடந்து கொள்வார் எனவும் , சுட்டித்தனமாக இருந்தாலும் படிப்பிலும் கவனமாக இருந்துகொள்வார் எனவும் தெரிவித்தார் . சமூக வலைதளங்களில் வைரலான அந்த குறிப்பிட்ட வீடியோ எடுக்கப்படும்போது அன்றைய தினம் பள்ளிக்கு கொடுத்தனுப்பிய ஸ்நேக்சை சாப்பிடாமல வந்ததால் அவரது அப்பா மிரட்டினார். இதற்காக அவள் அப்பாவை அடிக்க பாயிந்தாள் அதற்காக மிரட்டிய போதுதான் அதுபோல பேசினார்.
இதனை என் தோழிக்கு அனுப்ப அது தற்போது வைரலாகி வருவதாகவும் , ஆனால் இனி இது போல் குழந்தைகளை அழ வைத்து வீடியோவினை சமூக வலைதளங்களில் பகிரபோவதில்லை எனவும் தெரிவித்தார் . மேலும் சிறுவயதிலேயே திருக்குறள் சிலவற்றை சாதாரணாமாக ஒப்புவிக்கும் ஸ்மித்தா பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளுடனும் சகஜமாக விளையாடி வருகிறார் . அதே வேளையில் சக நன்பர்களுடன் விளையாடும்போது பள்ளிகளில் சொல்லிதந்த பாடல்களை பாடுவது , பிரபலமான கார்ட்டூன் வசனங்கள பேசி மகிழ்ந்து விளையாடி வருகின்றார்.
ஸ்மித்தா குறித்து ஆட்டோ டிரைவரான அவரது தந்தை பிரகாஷ் கூறும்போது , ஸ்மித்த சுட்டித்தனம் மட்டுமல்லாது பாசமானவள் எனவும் , இந்த வீடியோ எடுத்ததும் அது இவ்வளவு வைரலாகும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார் . இத்தனைக்கும் காரணமான குழந்தை ஸ்மித்தாவோ அதே மாறாத சுட்டித்தனத்துடனும் மழலை மொழியுடனும் நம்மிடையே பேசும் போது காணொளியை கண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு , மீண்டும் ஒரு முறை அந்த வசனத்தை பேசி காட்டினார்.