சசிகலாவுக்கு சிறையிலும் சோதனை..!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓராண்டாக விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணையின் இறுதி கட்டமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும், துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கும் இது தொடர்பாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஜெயலலிதாவின் மரண சர்ச்சைக்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி தெரிவித்திருக்கிறது. விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம், வரும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.