இறப்பர் தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு சம்பவம்…

ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் வெடித்த சிலிண்டர் 30 வருடங்கள் பழமையானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தொழில் திணைக்களத்தின் தொழில்பாதுகாப்பு பிரிவு நடத்திய விசாரணைகள் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ஐந்து பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில், 17 எரிவாயு சிலிண்டர்களை லொறியிலிருந்து இறக்கியபோது, அவற்றில் ஒன்றிலிருந்தே கசிவு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.