பதவி மாற்றம்..!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்து சில மணித்துளிகளில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், ”அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியான அறிக்கையில், ”அதிமுக அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டதாகவும், மேலும் அவருடன் சேர்த்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்திரம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோரும் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பி.ஹெச்.பாண்டியன் சட்ட ஆலோசகராகராகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக காஞ்சி பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ள பி.எச்.பாண்டியன் 1945-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர். சட்ட படிப்பில் முதுகலை பட்டம் முடித்து, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.