அமெரிக்கா பயங்கர வாத எல்லையில் உள்ளது!

கிளீவ்லாந்து, மெரிக்கா

மெரிக்கா தற்போது பயங்கரவாத எல்லையில் உள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா கூறி உள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் உள்ளது தெரிந்ததே. இந்நிலையில் பாரக் ஒபாமா கிளீவ்லாந்தில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் குறித்து கருத்துக்களை தெரிவித்தார்.

பாரக் ஒபாமா, “தற்போது அமெரிக்கா பயங்கரவாதத்தின் எல்லையில் உள்ளது. வரும் தேர்தலில் அந்த பயங்கர வாதம் முடிவுக்கு வர வேண்டும். நாம் இப்போது அமெரிக்காவில் காண்பது வழக்கமான நிகழ்வுகளாக இல்லாமல் பயங்கரவாத நிகழ்வுகளாக உள்ளன. வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி இந்த பயங்கரவதத்தை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் அமைதியை உண்டாக்க நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவை மீண்டும் சக்தி உள்ள நாடாக மாற்ற வாக்களர்களாகிய உங்களால் மட்டுமே முடியும். உங்களால் மட்டுமே நல்லது எது கெட்டது என இனம் பிரிக்க முடியும். தீய சக்திகளை விரட்டி விட்டு நல்ல சக்திகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது உங்களிடமும் நீங்கள் அளிக்கப் போகும் வாக்குகளில் மட்டுமே உள்ளது.” என தனது உரையில் குறிபிட்டுள்ளார்.