பூசைக்கு வந்த ஐயர் சிறுவனுடன் ஓட்டம்; வைத்தியசாலையில் சிறுவன்!

கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு பூசை செய்யவரும் பூசகர் ஒருவர், அந்த பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று, அறையொன்றிற்குள் அடைத்து வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். நாள் முழுவதும் பூசகரின் பிடியில் சிறுவன் அறையில் அடைபட்டுள்ளான். பூசகரினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு பூசை செய்ய வரும் பூசகரே கைவரிசையை காட்டியுள்ளார். சிறுவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றின் அறையில் சிறுவனை பூட்டி வைத்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். நாள் முழுவதும் பூசகரின் பிடியில் சிறுவன் சிக்கியிருந்துள்ளான்.

பின்னர், இன்னொருவருடன் சிறுவனை கோரக்கன்கட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

நடந்த சம்பவத்தை சிறுவன் உறவினர்களிற்கு தெரிவித்ததையடுத்து, கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சிறுவன் நேற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்