மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவில் முதன் முறையாக இந்திய அரசின் பொதுத்துறை காப்பிட்டு கழகத்தின் துணை மேலாளராக கோவையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் தேர்வு செய்யபட்டுள்ளார்.
கோவை அடுத்த காளப்பட்டி பகுதியில் புது காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளி கருப்புசாமி, திலகவேணி தம்பதியரின் இரண்டவது மகன் ராம்குமார் . இவர் பள்ளி படிக்கும் போது ஏற்பட்ட கண் பாதிப்பினால் இரண்டு விழிகளில் முற்றிலும் பார்வை திறனை இழந்த நிலையிலும் , கல்வி மட்டுமே தனது வாழ்வை உயர்த்தும் என்ற ஒரே கெள்கையுடன் போராடத் தொடங்கினார் ராம்குமார். பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் பி காம் பாடத்தை தேர்வு செய்து படிக்க தொடங்கினார்.
இளங்கலை படித்தவுடன், முதுகலை படிக்க எண்ணிய போது கோவை வரதராஜபுரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி நிலையத்தின் சார்பில் இலவச போட்டி தேர்வுகள் சிறப்பு மாணவர்களுக்கு கற்று தருவது தெரிந்து அதில் சேர்ந்து படிக்க தொடங்கினார். கடந்த ஓருவருடங்களில் பல தேர்வுகளில் ஸ்கைப் மூலம் தேர்வு எழுதியும் , அடுத்தடுத்த நேர்முக தேர்வுகளில் படு தோல்வி ஏற்பட்ட போதிலும் விட முயற்சியோடு தேர்வு எழுதிவந்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள காலியாக உள்ள 25 இடத்திற்கு இந்திய முழுவதும் லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் ராம்குமார் வெற்றி பெற்றார். அடுத்தடுத்து நடந்த தேர்வுகளில் முற்றிலும் வெற்றிகொடியை தன்னம்பிகையுடன் கையில் பிடித்து சுதந்திர இந்தியாவின் முதல் பொதுதுறை காப்பீட்டு நிறுவனத்தின் துணை லோலளாராக தேர்வு செய்பட்டார். அக்டோபர் மாதம் நான்காம் தேதி பணியில் சேர அழைப்பு வந்துள்ளது..
இது குறித்து அவர் நம்மிடம் பகிர்கையில் :
இந்திய அளவில் நடந்த தேர்வில் 21 வயதில் துணை மேலாளாரக பொறுப்பு ஏற்க்க போவது நான் மட்டுமே இது என்னை போன்ற மாற்றுத்திறனளிகளுக்கு கிடைத்த வெற்றி .. கடினமான போட்டி தேர்வை எதிர்கொள்ள முதலில் பயம் இருந்தது சுற்றி நின்ற நண்பர்கள் ஆசிரியர்களின் ஊக்கம் மற்றும் மாற்றுத்தினாளியானஇந்திய அரசுப் பணியில் முதல் இடம் பிடித்து, கோவை மாற்றுத்தினாளி இளைஞர் சாதனைப் படைத்துள்ளார்.
கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்புசாமி. இவரது இரண்டாவது மகன் ராம்குமார். பிறவியிலேயே பார்வை திறனை இழந்தவர். ஆனால், துளியும் நம்பிக்கையை இழக்காத தன்னம்பிக்கை இளைஞன். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, விடாமுயற்சியுடன் படித்து பி.காம் பட்டம் பெற்றார். இதையடுத்து, எம்.காம் படித்துக் கொண்டிருக்கும்போதே, வரதராஜபுரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி நிலையத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி பெற்றுவந்தார். அதிலும், பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது இந்தியஅரசின் பொது துறை காப்பிட்டு நிறுவனத்தின் தேர்வு எழுதி, அதில் வெற்றியும் பெற்று துணை மேலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராம்குமார், ” 25 பணி இடத்திற்கு, நாடு முழுவதும் லட்ச கணக்கானோர் தேர்வு எழுதினர். அதில் இருந்து 75 பேரை தேர்ந்தெடுத்து, குரூப் டிஸ்கசன், பர்ஸ்னெல் இன்டர்வ்யூ எடுத்தனர். அதில் இருந்து 25 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்தனர். நாடு முழுவதுமே, இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு இடம்தான் ஒதுக்கீடு செய்தனர். அந்த இடத்துக்குத்தான் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாட்டில் முதல்முறையாக, அதுவும் 21 வயதில் துணை மேலாளராக பொறுப்பேற்க உள்ளது நான்தான். இது மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்த வெற்றி” என்றார் மகிழ்ச்சி பொங்க.
ராம்குமாரின் இந்த வெற்றி கருப்புசாமியின் வீட்டில், சந்தோஷத்துடன் கூடிய நம்பிக்கை ஒளியை பற்றவைத்திருக்கிறது. நான் சாதிக்க வேண்டும் என்னை மற்றவர்கள் பின்பற்றி வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை என்னை தொடர்ந்து முன்னேற வைத்தது முதலில் நடந்த தேர்வுகளில் தோல்விகளில் சந்தித்த அனுபவம் எனக்கு இந்த தேர்வை எதிர்கொள்ள உதவியது மேலும் கற்றல் கூட இருந்த நண்பர்கள் படிக்க சொல்லியும், குறிப்புகளை ஆடியோவடிவிலும் கேட்டு ஸ்கைபு வைத்து தேர்வு எழுதி உள்ளோன். போட்டி தேர்வுகளை கண்டிபாக மாற்றுத்தினாளிகள் எதிர்கெள்ள வேண்டும்.
நமக்குள்ள இடத்தை நாம் பெற கடினமான பயிற்சி மேற்கெள்வதில் தவறு இல்லை இதனால் மற்றவர்கள் உதவிட முடியும் என்றார்.. மகன் இது போல் உயர்வான்என நாங்கள் நினைக்க வில்லலை காலம் அவரது உழைப்பு மரியதை தந்து உள்ளது என்கின்றனர் பெற்றவர்கள் மாற்றுத்தினாளி என முடங்கி போகமால் இந்திய அளவில் சாதித்த ராம் குமாரின் உழைப்பு மட்டுமே மற்றவர்களுக்கு ஓரு படிப்பினையாக உள்ளது.