10 வயது சிறுமியை கற்பழித்து பிளாட்பாரத்தில் வீசிய அயோக்கியன்

டெல்லியில் அயோக்கியன் ஒருவன் குடிபோதையில் 10 வயது சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த குற்றத்தை தடுக்க அரசு முயற்சி செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத சில ஜென்மங்கள் தொடர்ந்து தங்களது பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

டெல்லியில் 10 வயது சிறுமி ஒருவர் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்து வந்தார். இவரது பெற்றோர் பிழைப்பு தேடி டெல்லிக்கு வந்தனர். இவர்கள் பிளாட்பாரத்தில் தங்கி வந்த நிலையில் ஒரு அயோக்கியன் குடிபோதையில் நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்து விட்டு, பிளாட்பாரம் அருகே வீசிச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் சிறுமி காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் தேடினர். சற்று தொலைவில் தங்களது மகள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபரை கைது செய்தனர். அவனை விசாரித்ததில் அவன் தான் இந்த கீழ்தரமான வேலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.