குற்றங்கள் அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றா?

சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு குற்றம் இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்: ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ கட்டர்ஸ்

 

ஜெனிவாவில் உள்ள ஐநா சபைக் கூடத்தில் மனித உரிமைகள் குறித்த வருடாந்தரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ கட்டர்ஸ் தலைமை தங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:’உலக நாடுகளின் சார்பாக மனித உரிமைக்காக போராடும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரித்துக்கொள்கிறேன்.இந்த போராளிகளினால் தான் மனித உரிமை குறித்த செய்திகள் ஐநாவிற்கு தெரிய வருகிறன.

இம்மாதிரி சமூக அக்கறை கொண்ட இவர்களின் மீது  சமீபகாலமாகவே தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 38 உறுப்பு நாடுகளில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடந்த வண்ணம் உள்ளன. அது தவிர்க்கப்பட வேண்டும் .’இம்மாதிரி சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்’ இவ்வாறு அவர் பேசினார்.

இந்த குற்றங்கள் அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.