விண்வெளி ஆய்வில் நாசா வெளிட்ட அதிர்ச்சி தகவல்..!

சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோள் வியாழன். இதில் பூமியை விடப் பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக புதியதாக கண்டுபிடுத்துள்ளனர்.

நிலவில் மற்றும் செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருந்ததற்கான ஆய்வில் தெரியவந்தது, இந்நிலையில், வியாழன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் தெரிந்துள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலத்தின் மூலம் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாகவும் வியாழனில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.

கலிலியோ அனுப்பும் தகவல்களைக் கொண்டு நாசா விஞ்ஞானிகளுடன், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அடங்கிய குழு இது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.