கையெழுத்து போலவே அமையும் தலையெழுத்து.! என்பது முன்னோர்களின் பழமொழி.
நாம் பள்ளியில் பயிலும் போது ஆசிரியர் ஒரு மாணவனைப் பார்த்து ”உனது கையெழுத்தைப் போல மோசமான எழுத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை..!” ” என்ன எழுத்து இது., கோழி கிறுக்கியதை போல இருக்கிறது” இந்த பேச்சுக்களை நாம் பள்ளியில் பயிலும் போது நமது ஆசிரியர் நம்மையே அல்லது நமது நண்பரையோ நோக்கி கூறியிருப்பார்.
இந்த விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் ஒரு மாணவி இருக்கிறார். அவர் நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா.
இந்த மாணவியின் கையெழுத்தானது உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இவரின் கையெழுத்து நாம் அன்றாடம் கணினியில் உபயோகிக்கும் மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகாக இருக்கிறது.
இவரின் கையெழுத்தானது கணிப்பொறியில் இருந்து அச்சு எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரின் எழுத்துக்கள் சீரான இடைவெளியில் நேராக கணினியின் உதவியால் ஆச்சு எடுத்தார் போலவே உள்ளது.
இவரின் கையெழுத்தானது நேபாளி ஆயுத படையிடம் பல்வேறு விருதுகளை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இவரது கையெழுத்து ட்ரெண்டிங்கில் உள்ளது.