இன்றைய காலகட்டத்தில் முகநூல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முகநூல் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம்.
இதனால், நன்மை எவ்வளவு இருக்கிறதோ அதை விட பன்மடங்கு அதிகமாக தீமையும் இருக்கிறது.
இந்நிலையில், இந்த வீடியோவில் முகநூலினால், ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனையை தெளிவாக காட்டியுள்ளனர்.
அதாவது, முகநூல் பயன்படுத்த தெரியாத ஒரு பெண், தனது தோழி மூலம் முகநூல் கணக்கை ஆரம்பிக்கிறார். அப்போது, அவருக்கு ஒருவர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்க அவரும் அதை அக்சப்ட் செய்ய, இருவரும், முதலில் நண்பராக பழக தொடங்குகின்றனர்.
இந்நிலையில், திடீரென்று அந்த இளைஞர் இளம்பெண்ணிடம், உன்னை எனக்கு பிடித்துள்ளது எனக் கூற, அதற்கு அந்த பெண் அவரை திட்டிவிட்டு போனை ஆப் செய்து விடுகிறார்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் அந்த இளம்பெண்ணின் போட்டோவை, கால் கேர்ள் என குறிப்பிட்டு முகநூலில் பதிவேற்றம் செய்து விடவே, இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து விடுகிறார்.
இந்த பிரச்சனையானது, இவர்களை மட்டும் தொடராது, மற்றொரு குடும்பத்தையும் பாதித்துள்ளது.
அந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும் மக்களே,