தினமும் காலையில் இதை குடிப்பதை தவறாமல் பின்பற்றி வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.
தேவையானவை
- எலுமிச்சை- 1
- உப்பு- இரண்டு டீ ஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
- முதலில் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு எலுமிச்சையின் சாற்றை பிழிந்து பின் அதில் இரண்டு டீ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து தினமும் காலையில் குடித்து வர நல்ல தீர்வுக் காண முடியும்.
பயன்கள்
- இந்த கலவை மூலம் உடலில் செரோடோனின் அளவு அதிகமாகும். இது உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
- நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படுகின்றன. இது செரிமானத்திற்கு உதவும் முதல் படி ஆகும். இதனால் அஜீரண கோளாறுகளுக்கு தீர்வுக் காண முடியும்.
- நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால் இரவு நல்ல உறக்கம் கிடைக்கப் பெறலாம்.
- உடலில் உள்ள நச்சுக்களை போக்க இந்த பானம் உதவுகிறது. எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவுகிறது.
- உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்கள் இன்சுலின் அளவை சீராக்குகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்க கூடியது ஆகும்.
- உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள், சீரற்று இருக்கும் இதய துடிப்பை சீராக்க செய்கிறது, மற்றும் உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
- இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. இது இயற்கை முறையில் கருவளத்தை ஆண், பெண் இருவர் மத்தியிலும் ஊக்குவிக்கிறது.