ஸ்டீவ் ஸ்மித் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஓராண்டு தடையில் உள்ளார்.

இந்த தடையானது மார்ச் மாதம் தான் முடியும். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று திருமணம் புரிந்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டேனி வில்லிசை ஒரு மதுபான விடுதியில் ஸ்மித் சந்தித்துள்ளார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் திருமணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், ‘எனது சிறந்த தோழியை திருமணம் செய்துள்ளேன். இது எனக்கு நம்ப முடியாத, மறக்க முடியாத நாள்’ என தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் திருமணத்திற்கு சக அணி வீரர்களான ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.