‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தின் ஆக்ஷ்ன் டீஸர்-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘திமிரு’ திரைப்படத்தில் மிரட்டலான வில்லியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இப்படத்தினைத் தொடர்ந்து ‘வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இப்படங்களை அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘அண்டாவ காணோம்’.
இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்’ நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ள இப்பட்டத்தினை இயக்குநர் சி.வேல்மதி இயக்குகிறார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக PV ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
முன்னதாக இப்படத்தின் முதல் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. வரும் அக்டோபர் 18-ஆம் நாள் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தனிக்கை குழு U சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!