தொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்!!

தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து பேசுவதற்கு உதவுவது 2டி தொழில்நுட்பமாகும்.ஆனால், இனி வரும் காலங்களில் 3டி தொழிநுட்பம் ஊடாக தொலை தூரத்தில் உள்ளவர்கள் நம்முன் தோன்றி பேசும் புதிய தொழிநுட்பம் வெளியாகவுள்ளது.

குறித்த செயற்பாட்டை மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதன் பயனாக தற்போது 3டி கேப்சரிங் கருவி கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த கருவியின் ஊடாக தூரத்தில் இருக்கும் ஒருவருடன் மற்றையவர் பக்கத்தில் உட்கார்ந்து உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள முடியுமென மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தவகையில் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் முயற்சியால் உருவாகிய இந்த கருவிய எதிர்காலத்தில் இந்த உலகமே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.