யாழில் அநாதரவாக கைவிடப்பட்ட சிங்களப் பெண்மணி……

பிலியந்தலையை வசிப்பிடமாக கொண்ட சகோதர மொழியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்தில் அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளார்.குறித்த பெண் கோண்டாவில் பகுதியில் பரிதாபப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்களினால் சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இது தொடர்பாக அவர் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்தலத்திற்கு சென்று அப்பெண்மணியை பொறுப்பிலெடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.