சீனப் பெண்களின் அழகுக்கு காரணம்?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. உணவு பழக்கம், கடவுள் நம்பிக்கை, அழகு என நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.

அப்படி பெண்களுக்கு மிக பிடித்த அழகைப் பற்றி பேசுகையில், எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு விதமான அழகுக் குறிப்புகளை மேற்கொள்வார்கள்.

அதனை தெரிந்துகொள்ள எல்லாருமே விருப்பப்படுகிறோம். கொழுக் மொழுக்கென குண்டான மொழு மொழு சருமத்துடன் இருக்கும் யாரை பார்த்தாலும் “சைனிஸ் டால்” என வர்ணிக்கிறோம்.

சினாவில் இருக்கும் பெண்களின் சருமம் இயற்கையாகவே மிக மிருதுவான, கண்ணாடி போன்ற சருமம்.

அவர்களின் சருமம் வயதான பின்னும் இளமையாக இருக்கும். ஆனால் அவர்களுக்கும் சருமப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்.

அப்படி வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? சிப்பி பொடியை பயன்படுத்துவார்களாம்.

சிப்பி பொடி சீனாவில் பொதுவாய் எல்லா இடத்திலும் காணப்படும். இது சருமத்திற்கு நிறத்தினை மெருகூட்டுகிறது. சருமத்தில் மினுமினுப்பையும் தருகிறது. அதனை நீரில் குழைத்து மாஸ்க் போல் போட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் தமிழ் பெண்களும் சீனப் பெண்களை போல ஜொலிக்கலாம்.