நடிகை நிலானி தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நேற்று நிலானியின் காதலரான காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலானி நடித்த சில சீரியல்களில் லலித்குமார் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
நிலானி இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் லலித்குமார் நிலானியை காதலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், லலித்குமாரை விட்டு பிரிய நிலானி முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் தான் லலித்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர் போகும் தருவாயிலும் அவர் நிலானி.. நிலானி.. என்றே புலம்பியதாக அவரின் நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.