நிலானியின் காதலன் பதிவு செய்த கடைசி… பேஸ்புக் போஸ்ட் !

சின்னத்திரை நடிகை நிலானி புகார் கொடுத்ததை அடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட லலித் குமாரின் குடும்பத்தாருக்கு சின்னத்திரை பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

டிவி சீரியல் நடிகை நிலானி உதவி இயக்குனரான காந்தி லலித்குமார் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் வற்புறுத்துவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் சென்னை கேகே நகரில் நடுத்தெருவில் தீக்குளித்த லலித் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்நிலையில், அவரது பேஸ்புக் போஸ்ட்களும் மியூசிக்கலியில் அவர் செய்த டப்மேஷ்களும் தற்போது வைரலாகியுள்ளன.

அவற்றை கீழே பார்க்கலாம்…!

என் அழகென்ன என் தொழில் என்ன என்று மின்சாரக் கனவு படத்தில் பிரபுதேவா பாடிய பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார் லலித் குமார்.

நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து கமல் பேசிய வீடியோவையும் லலித் குமார் டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை என்று தத்துவம் பேசிவிட்டு இப்படி தற்கொலை செய்யலாமா லலித் குமார்?

லலித் குமார் கடைசியாக கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார். அதன் பிறகு அவர் ஃபேஸ்புக் பக்கம் வரவில்லை.