கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாயை மூடநம்பிக்கையின் காரணமாக தள்ளி போடுகின்றனர்.
பெரும்பாலும் பலரது வீட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியே ஒரு அறையில் தங்க வைப்பர். அவர்களுகென்று தனி தட்டு, படுக்கை அனைத்தும் தனியாக தீண்டதகாதது போல் உணர்ந்து வெளியில் இருக்க வைப்பர்.
இதனால் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் பலரும் இதனை தள்ளி போடுவதற்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்தும் அதனை தொடர்ந்து செய்கின்றனர். தற்போது உள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதா என்றே பலரும் யோசனை செய்கிறார்கள்.
முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக அறையில் இருக்க வைத்தனர் என்றால் அந்நேரத்தில் ஓய்வு தேவை அதன் காரணத்தாலே அவர்களுக்கென்று தனியாக ஒரு இடம் கொடுத்தார்கள். ஆனால் நாளடைவில் அது தீட்டாக மாறி பலரும் தீண்டதாகத பெண்கள் என்றே சித்தரித்தனர்.
மாதவிடாய் நேரத்தில் எந்த ஒரு தெய்வமும் கோயிலுக்கு வரக்கூடாது, பூஜை செய்யக் கூடாது என்று எந்த இதிகாதசத்திலும் குறிப்பிடவில்லை. இப்போது உள்ளவர்கள் சாமி மீது அதீத மூடநம்பிக்கையில் இருக்கின்றனர் ஆனால் அதில் ஒரு பங்கு கூட உடல்நலம், ஆரோக்கியம் என்பதில் கவனம் செலுத்தவில்லை.
இம்மாத்திரை உட்கொள்வதினால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்றவற்றை வரக்கூடும். அதேபோல் இதனை ரத்த அழுத்தம், தலைவலி, ஒற்றை தலைவலி, உடல் பருமன் ஆகியோர் கண்டிப்பாக உட்கொள்ள கூடாது. பெண்கள் இதனை சாப்பிடுவதால் பெரும் பிரச்னைகளை பின்நாளில் சந்திக்க நேரும்.
தவறான புரிதலுக்காக, சாமி என்பதற்காகவும் மூடநம்பிக்கையின் உச்சத்திற்கு சென்று இது போல் அநாவசியமான செயல்களை செய்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் தள்ளி போடுவதற்கு மாத்திரை உட்கொள்வது தவறு! உடல்நலத்திற்கு தீங்கு!