முச்சக்கர வண்டியைப் புரட்டிய நாய்….

யாழ். எழுதுமட்டுவாளிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியின் குறுக்கே வந்த நாயுடன் மோதுண்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதனைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் யாழ்- ஏ-09 பிரதான வீதியிலுள்ள உசன் சந்தியில் நேற்றுத் திங்கட்கிழமை(17) பகல் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் யாழ். எழுதுமட்டுவாள் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சதீஸ்குமார்(வயது-36) என்ற இளம் குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார்.

இதேவேளை, விபத்துக்குள்ளாகிய முச்சக்கர வண்டியும் கடும் சேதங்களுக்கு உள்ளானது.