தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
பிரணய் குமார் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் இதை மீறி பிரணயும், அம்ருதாவும் ரகசிய திருமணம் செய்து தனியாக வாழ்ந்தனர்.
இந்நிலையில் கர்ப்பமான அம்ருதாவை, பிரணய் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் பிரணயை மருத்துவமனை வாசலில் வெட்டி கொன்றார்.
இந்நிலையில், தனது தந்தை மாருதியும், உறவினர் ஷரவன்குமாரும் இந்த படுகொலைக்கு காரணம் என அம்ருதா பொலிசில் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே, இந்த கொலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ வெமுலா வீரேஷமுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக, அம்ருதா தற்போது தெரிவித்துள்ளார்.
அம்ருதா கூறுகையில் வெமுலா வீரேஷம் என்னையும், என் கணவரையும் பலமுறை தொலைபேசியில் அழைத்து பிரிந்துவிடும்படி மிரட்டினார்.
அவர் தான் என் தந்தை பேச்சை கேட்டு கூலிப்படையை ஏவி என் கணவரை கொலை செய்துள்ளார் என கூறியுள்ளார்.