திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் களத்தில் இறங்கி டி.ராஜேந்தர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்புகிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .இதில் வென்று ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என்ற திமுக பரபரப்பாக செயல்பட்டு வருகிறது .
மேலும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றவுடன் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் கண்டிப்பாக வெற்றி பெற்று அங்கீகாரத்தை நிலைநாட்ட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் .
ஆனால் அதே நேரத்தில் திமுகவிற்கு எதிராக அதிமுக, தினகரன் அணி, பாஜக மும்முரத்துடன் செயல்பட்டு வருவதால் போட்டிகள் பயங்கரமாக உள்ளது .
இந்நிலையில் சமீபத்தில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை அறிமுகம் செய்த டி.ராஜேந்தர், திருவாரூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அத்தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவும். மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள டி.ராஜேந்தர் இந்த தொகுதியில் தனது சூறாவளியான அடுக்கு மொழியாலும் மற்றும் ஆவேசமான பேச்சாலும் அதிக ஓட்டுக்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவருக்கு அழகிரி ஆதரவு அளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.