ஈழத்தில் பிறந்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய தமிழரான எம்.ஜி.இராமச்சந்திரன் இன்று வரையிலும் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.
எமது மனதை விட்டு என்றும் நீங்காத மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி கண்டியில் பிறந்தவர்.
தமிழ்த் திரைப்பட நடிகராகவும், 1977 முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கண்டியில் நேற்று முன் தினம் நடைபெற்றிருந்தன.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்திய தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் தமிழ் நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, தேனிசைத் தென்றல் தேவா, குணச்சித்ர நடிகர் சரவணன் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1. தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் இலங்கையில் தெரிவித்துள்ள விடயம்
2. எம்.ஜி. ஆரின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகளும் விருது வழங்கலும்
3. இலங்கையில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் ஒரு பொக்கிஷம்: சபாநாயகர் புகழாரம்
4. இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு ஒரு காவலன்: செல்வம் அடைக்கலநாதன்
5. இலங்கையில் மக்கள் சிந்துகின்ற கண்ணீர் துடைக்கப்படும்! இந்திய அமைச்சர் உறுதி
6. எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் என்றோ தீர்வு கிடைத்திருக்கும்: இராஜாங்க அமைச்சர்