தெஹிவளை விலங்கினசாலையில் இருந்து பந்துல என்ற யானையை விடுவிக்குமாறு இந்திய அமைச்சரும், விலங்கின உரிமை நடவடிக்கையாளருமான மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
பந்துல என்ற யானை கடந்த 67 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அதற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே குறித்த யானையை ரிதியாகம தேசிய பூங்காவுக்குள் சுதந்திரமாக விடுமாறு மேனகா காந்தி இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.