கனடா – ஒன்றாரியோ மாகாண உச்சநீதிமன்ற நீதிபதியாக இலங்கையில் பிறந்த கனேடிய பிரஜையான சுரங்கனி குமாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் நீதியமைச்சர் மற்றும் கனடாவின் சட்டத்தரணிகளின் தலைமை அதிகாரியான ஜோடி வில்சன் றைபோல்ட், அந்நாட்டின் ஏழு மாகாணங்களுக்கான 19 நீதிபதிகளைத் தெரிவு செய்து அறிவித்துள்ளார்.
அவர்களில், இலங்கையில் பிறந்த சுரங்கனி குமாரநாயக்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி வரை குறித்த மாகாணத்தின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த டீ. எஃப். டவுசனின் இடத்தை தற்போது நீதிபதி குமாரநாயக நிரப்பியிருப்பியுள்ளார்.
நீதிபதி சுரங்கனி குமாரநாயக, குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளதோடு, வின்சன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணிப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.