சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியானதால் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
சின்னத்திரையின் மூலம் பிரபலமான நடிகை நிலானி, உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ளமாறு வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இதனையடுத்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், நான் லலித்குமாரிடம் நண்பராக தான் பழகினேன். அவர் தான் என்னுடைய நட்பினை தவறாக புரிந்து கொண்டார் என நிலானி பொலிஸாரிடம் கூறியிருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிலானி லலித்குமாருடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும், திருமணம் செய்துகொள்ளாமல் மெட்டி அணிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தின.
இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலாக, நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்திடாத பொலிஸார் விசாரணைக்காக நிலானியை தேடி சென்றபோது , போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.