வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒக்ரோபர் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சருக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாதென முதலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட சிலரது வழக்கு உதாரணங்களையும் முதலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, வழக்கு ஒக்ரோபர் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, டெனீஸ்வரனை பதவிநீக்கியது சட்டவிரோதம் என தொடரப்பட்ட வழக்கு இம்மாதம் 28ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.