என்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தார்… படுக்கையறை காட்சி வெளியானதை தொடர்ந்து நிலானி திடுக்கிடும் தகவல்.!

சீரியல் நடிகை நிலானி, காந்தி லலித்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார், கடந்த சில நாட்களாக லலித்குமார் நிலானியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார் .

ஆனால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பாத நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார் என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த லலித்குமார் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அவர் இறப்பதற்கு முன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் போலீசார் இதுகுறித்து நிலானியிடம் விசாரிக்க முயன்றபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் வீட்டிலும் இல்லை.

இன்று காலை கமிஷனர் அலுவகம் வந்த நிலானி ஒரு மனுவை அளித்தார். அதில் ‘எனது காதலர் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல.

அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில்தான் நான் இருந்தேன். ஆனால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்துக்கொண்டே இருந்தார். எனவே அவரை விட்டு விலகுவது என முடிவெடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் நடந்த உண்மைகளை அப்படியே கூறியுள்ள நிலானி, கடந்த சில மாதங்களாக லலித்குமார் எந்த தொந்தரவும் செய்யாமல் இருந்தார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் என்னை போலீஸார் கைது செய்தபோது ஜாமீனில் எடுக்க உதவிய பிறகு, மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

கடந்த 10 நாளுக்கு முன் லலித்குமார் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். ஒரு நாள் மட்டும் நீ என் விருப்பப்படி நடந்துக்கொள்.

நான் செய்யும் எந்தச் செயலுக்கும் நீ மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று கூறினார். ஏற்கனவே என் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதால் குழந்தைகளுக்காக நான் அதை ஒப்புக்கொண்டேன்.

பஸ்சில் தென்மாவட்டத்துக்குச் சென்றோம். பஸ்சில் வைத்தே எனக்கு மெட்டி அணிவித்தார்.

அப்போது என்னுடைய செல்போனில் அதை வீடியோவாக எடுத்தார். முதலில் நான் அதற்கு மறுத்தேன்.

ஆனால், என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது’ என கூறியுள்ளார்.

இது தொடர்பாக லலித்குமாரின் சகோதரர் மற்றும் சகோதரியிடத்தில் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவர்களின் பதிலை பொறுத்தே இந்த விவகாரத்தில் உண்மை நிலை தெரிய வரும் என்று காவல் துறையினர் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.