சீஸ் எனப்படும் பாற்கட்டி ஆனாது நிரம்பிய கொழுப்புக்களை அதிகளவில் கொண்டது.
எனவே இவ்வாறான பாற்கட்டிகளை அதிக அளவில் உள்ளெடுக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன.
அதாவது குறித்த நிரம்பிய கொழுப்புக்கள் பொதுவாக இருதய நோய்களை தோற்றுவிக்கக் கூடியன.
ஆனாலும் பால் உற்பத்திப் பொருட்கள் உடலுக்கு தீங்கற்றவை என அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
உண்மையில் சீஸ் உட்பட கொழுப்பு அடங்கிய இப் பால் உற்பத்திகள் கொலஸ்ரோல்லின் அளவைக் குறைப்பதாகவே சொல்லப்படுகிறது.
நடுத்தர வயதுடைய, அதிக எடைகொண்ட இளையோரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது நிரூபணமாகியுள்ளது.