விஞ்ஞானிகள் ஒலியலைகளை பயன்படுத்தி மேற்கொண்ட சாதனை!

விஞ்ஞானிகள் ஒலியலைகளைப் பயன்படுத்தி நீர்குமிழிகளை காற்றில் மிதக்கும்படி செய்துள்ளனர்.

சாதாரணமாக நாம் அறியும் சவர்க்கார நீர்க்குமிழிகள் ஒரு சிறு குறுகிய கணத்துக்கே நிலைத்திருக்கும்.

ஆனால் இங்கு உருவான நீர்க்குமிழிகள் 10 நிமிடங்கள் வரையில் அதன் உருவம் மாறாது காணப்பட்டிருந்தது.

இதற்கென நாம் முன்னர் அறிந்திருந்த அகோஷ்டிக் லேவிடேஷன் (Acoustic Levitation) எனும் ஒலியை இலகுபடுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தொழில்நுட்பத்தில் புவியீர்ப்பை எதிர்கொள்ளுமளவுக்கு சக்திவாய்ந்த ஒலியலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும் வளிக்குமிழை மிதக்கச்செய்யவென இதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது இது முதன்முறையல்ல.

இதற்கு முன்னரும் 1991 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இதன் பொறிமுறை பற்றி தெளிவான அறிவு விஞ்ஞானிகள் மத்தியில் இருந்திருக்கவில்லை.

தற்சமயம் அல்ட்ரா சோனிக் ஒலியலைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு திரவங்களில் மேற்கொள்ப்பட்டிருந்த ஆய்வுகளின் முடிவில் அதிகரிக்கும் ஒலியலைகளின் செறிவு காரணமாக நீர்த்துளிகள் தட்டையாகி, பாத்திம் போன்று உருவாகி பின் இறுதியில் குமிழிகளை உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.