யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யக் கூடிய ஏற்றுமதிக்கு தகுதியான தரத்தில் உயர்ந்த திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனை விவசாய அமைச்சரினால், விவசாய திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் திராட்சை உற்பத்தி அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சையில் பெரும் தொகை வயின் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இதேபோன்று இந்த திராட்சையை பயன்படுத்துவதில் பொதுமக்கள் மத்தியில் ஆககூடுதலான கேள்வி இல்லாததனால் சிறந்த தரத்திலான ஏற்றுமதிக்கு பொருத்தமான திராட்சையை அறிமுகப்படுத்துமாறு யாழ்ப்பாண உற்பத்தியாளர்கள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இதன் பலனாக விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் மஹிந்த அமரவீர திராட்சை தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்தார்.