வைரலாகும் நித்யானந்தாவின் வீடியோ!

கர்நாடகாவில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா தனது சீடர்களிடம் உரையாற்றும் போது வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

வழக்கமாக சீடர்களிடம் உரையாடும் நித்யானந்தா, தனது உரையின் போது வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலை நெட்சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கும் குரங்குகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் உள்ளுறுப்புகளில் சில வேறுபாடுகள் உள்ளது.

இதை சரிப்படுத்தி குரல்வளத்துக்கு காரணமான ‘வோக்கல் கார்ட்’ எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரிப்படுத்தி விட்டால் சிங்கம், புலி ஆகியவற்றை பேச வைக்கலாம் என்பதை நான் ஆராய்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

சிறப்பு உணர்வு அதிர்வலைகளை விலங்கினங்களின் மூளை பகுதிகளுக்குள் செலுத்துவதன் வாயிலாக இந்த உறுப்புகளை அவற்றுக்குள் உருவாக்கி, குரங்கு உள்ளிட்டவற்றை பேச வைக்க முடியும் என்பதை அறிவியல்பூர்வமான, மருத்துவரீதியிலான ஆராய்ச்சியின் மூலம் நான் கண்டறிந்தேன்.

இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனை முறையில் வெற்றி அடைந்துள்ளதை உறுதிப்படுத்தி கொண்ட பின்னர்தான் இதை நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேம். நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

இதை பயன்படுத்தி இன்னும் ஒரு வருடத்துக்குள் மாடுகளும், காளைகளும் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் உங்களிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பேசப்போவதை நீங்கள் கேட்கத்தான் போகிறீர்கள் என்பதுதான் அவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.